Friday 3rd of May 2024 08:51:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
உலக அளவில் குடியேற்றவாசிகளின் முதல் விருப்பத் தெரிவாக உள்ள கனடா!

உலக அளவில் குடியேற்றவாசிகளின் முதல் விருப்பத் தெரிவாக உள்ள கனடா!


உலகில் உள்ள மக்கள் குடியேற அதிக ஆர்வம் காட்டும் நாடாக கனடா உள்ளதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளிநாடு மற்றும் குடியேற்றம் தொடர்பான சொற்றொடர்களை இணையத்தில் தேடியவர்கள் தொடர்பான தகவல்கனை அடிப்படையாகக் கொண்டு ரெமிட்லி (Remitly) இணையம் முன்னெடுத்த ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, இலவச சுகாதார பராமரிப்பு வசதி உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு வெளிநாடு செல்ல விரும்புவோர் மத்தியில் கனடா பிரபலமாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக உலகில் மிக அமைதியான நாடுகளில் ஒன்றாக கனடா உள்ளமையும் குடியேற்றவாசிகளின் தெரிவில் கனடா பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

கனடாவுக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டுவோர் பட்டியலில் அஜர்பைஜான், இந்தியா, பாகிஸ்தான், கட்டார் ஆகிய நாட்டவர்கள் முன்னணியில் உள்ளனர்.

இதேவேளை, உலகில் இருந்து ஏற்கனவே கனடாவுக்குப் புலம்பெயர்ந்துள்ளவர்களின் கால் பகுதியினர் இந்தியர்களாவர்.

ஐரோப்பிய குடியேற்றவாசிகளில் மிகவும் பிரபலமான இலக்காக ஜேர்மனி உள்ளது. கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐரோப்பாவில் பெல்ஜியம், பிரான்ஸ், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாட்டவர்கள் கனடாவில் குடியேற்ற ஆர்வம் கொண்டுள்ளனர்.

வட அமெரிக்க நாடுகளில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பஹாமாஸ், பார்படாஸ், டொமினிக்கன் குடியரசு, கிரெனடா, ஜமைக்கா, மெக்சிகோ ஆகிய நாட்டவர்கள் கனடாவுக்கு குடிபெயர ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர்.

கனடாவுக்குச் செல்வதில் அதிக அக்கறை கொண்டவர்களாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மக்களும் உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளானா போட்ஸ்வானா, கானா, கென்யா, மடகாஸ்கர், மொரீஷியஸ், நமீபியா, நைஜீரியா, சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, துனிசியா, சாம்பியா உள்ளிட்ட நாட்டவர்கள் கனடாவில் குடியேற அதிக ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கனடா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE